/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சித்த மருத்துவமனையில் யோகா மத்திய அமைச்சர் துவக்கி வைப்பு
/
சித்த மருத்துவமனையில் யோகா மத்திய அமைச்சர் துவக்கி வைப்பு
சித்த மருத்துவமனையில் யோகா மத்திய அமைச்சர் துவக்கி வைப்பு
சித்த மருத்துவமனையில் யோகா மத்திய அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : மே 27, 2025 12:55 AM

தாம்பரம், தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.
இம்மருத்துவமனைக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இம்மருத்துவமனையின் பொதுக்குழு குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பங்கேற்றார்.
பின், வெளிநோயாளிகள் பிரிவில் காத்திருந்த நோயாளிகள் மற்றும் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட அமைச்சர், நரம்பியல் நோய் ஆய்வு கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, நாள்தோறும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை இயங்கும் யோகா பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இந்த யோகா மையத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் பயிற்சி பெறலாம். இந்த நிகழ்ச்சியில், சித்த மருத்துவமனை இயக்குனர் - பொறுப்பு, செந்தில்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.