/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலை கையுந்து பந்து போட்டி ஆதி பொறியியல் கல்லுாரி 'சாம்பியன்'
/
பல்கலை கையுந்து பந்து போட்டி ஆதி பொறியியல் கல்லுாரி 'சாம்பியன்'
பல்கலை கையுந்து பந்து போட்டி ஆதி பொறியியல் கல்லுாரி 'சாம்பியன்'
பல்கலை கையுந்து பந்து போட்டி ஆதி பொறியியல் கல்லுாரி 'சாம்பியன்'
ADDED : அக் 07, 2024 01:07 AM

சென்னை:அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, மண்டல அளவிலான போட்டி நடைபெறுகிறது. போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு கல்லுாரி மைதானங்களில், கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
இதில், மண்டலம் - 4க்கான கையுந்து பந்து போட்டி, வண்டலுார், தாகூர் பொறியியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கேற்றுள்ளன.
இதன் காலிறுதிக்கு போட்டிக்கு, ஆதி, சாய்ராம், பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா, தாகூர், பெரி, எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை, தனலட்சுமி, எம்.ஐ.டி., ஆகிய எட்டு கல்லுாரிகள் முன்னேறின. இதில், ஆதி, பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா, பெரி, தனலட்சுமி ஆகிய நான்கு கல்லுாரிகள் காலிறுதியில் வென்றன.
அடுத்து நடந்த அரையிறுதி போட்டியில், ஆதி, பெரி ஆகிய கல்லுாரிகள் வென்று, இறுதிப் போட்டியில் மோதின. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆதி பொறியியல் கல்லுாரி அணி வீரர்கள், 25- - -17, 25- - -22, என்ற புள்ளி கணக்கில் பெரி தொழில்நுட்பக் கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்த வெற்றியின் வாயிலாக, மாநில அளவிலான போட்டிக்கு ஆதி பொறியியல் கல்லுாரி அணி தகுதி பெற்றது.