/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலை அளவிலான பீச் மல்யுத்தம் ஜேப்பியார் மகளிர் அணி சாம்பியன்
/
பல்கலை அளவிலான பீச் மல்யுத்தம் ஜேப்பியார் மகளிர் அணி சாம்பியன்
பல்கலை அளவிலான பீச் மல்யுத்தம் ஜேப்பியார் மகளிர் அணி சாம்பியன்
பல்கலை அளவிலான பீச் மல்யுத்தம் ஜேப்பியார் மகளிர் அணி சாம்பியன்
ADDED : ஜன 19, 2025 09:48 PM

சென்னை:அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவுடன், அமெட் பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, அகில இந்திய பல்கலை இடையிலான 'பீச்' மல்யுத்தப் போட்டிகளை நடத்துகின்றன.
சென்னை அடுத்த கோவளம் கடற்கரையில், மூன்று நாட்கள் நடந்த இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள் சார்பில், இரு பாலரிலும் 200க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், ஆண்கள் பிரிவில் 60, 70, 80 மற்றும் 90 ஆகிய எடை அளவிலும், பெண்கள் பிரிவில் 50, 60, 70 மற்றும் 80 ஆகிய எடை அளவிலும் போட்டிகள் நடந்தன.
இதில், சென்னை செம்மஞ்சேரியில் இயங்கிவரும் ஜேப்பியார் பல்கலை அணி வீராங்கனையர் மாலைச்செல்வி, நிவேதிதா, சோனா, ரித்திகா முறையே 50, 60, 70, 80 ஆகிய எடை பிரிவில் தங்கம் வென்று அசத்தினர்.
பங்கேற்ற நான்கு எடை பிரிவிலும் தங்கம் வென்று அசத்திய ஜேப்பியார் பல்கலை அணி வீராங்கனையர், 20 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று, பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இரண்டாம் இடத்தை, 9 புள்ளிகளுடன் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி பிடித்தது.
ஆண்கள் பிரிவில், அமெட் பல்கலை அணி, 13 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.