/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பல்கலை, எஸ்.ஆர்.எம்., தென் மண்டல கபடியில் அபாரம்
/
சென்னை பல்கலை, எஸ்.ஆர்.எம்., தென் மண்டல கபடியில் அபாரம்
சென்னை பல்கலை, எஸ்.ஆர்.எம்., தென் மண்டல கபடியில் அபாரம்
சென்னை பல்கலை, எஸ்.ஆர்.எம்., தென் மண்டல கபடியில் அபாரம்
ADDED : நவ 03, 2024 12:29 AM

சென்னை இந்திய பல்கலைகளின் சங்கங்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், தென் மண்டல அளவில் பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
போட்டியில், தமிழகம் உட்பட தென் மண்டல அளவிலான 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்று, 'நாக் - அவுட்' முறையில் மோதி வருகின்றன.
நேற்று காலை நடந்த நாக் அவுட் சுற்றில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, தக்ஷஷிலா பல்கலை அணிகள் மோதின. இதில், 34 - 11 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் சென்னை பல்கலை அணி மற்றும் அண்ணாமலை பல்கலை அணிகள் மோதின. துவக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய, சென்னை பல்கலை அணி, 42 - 28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
எம்.எஸ்., பல்கலை அணி 38 - 29 என்ற கணக்கில், வேலுார் வி.ஐ.டி., பல்கலையும், கற்பகம் பல்கலை அணி, 34 - 29 என்ற கணக்கில் உஸ்மானியா பல்கலையையும் வீழ்த்தின.
மீனாட்சி அகாடமி அணி, 40 - 33 என்ற புள்ளிக்கணக்கில், பெங்களூரு ராஜிவ் காந்தி பல்கலை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கிறது.