/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலை டேபிள் டென்னிஸ் கர்நாடகா அணிகள் வெற்றி
/
பல்கலை டேபிள் டென்னிஸ் கர்நாடகா அணிகள் வெற்றி
ADDED : டிச 27, 2025 05:16 AM
சென்னை: சென்னையில் நடந்து வரும் தென்மண்டல பல்கலை அணிகளுக்கு இடையிலான 'டேபிள் டென்னிஸ்' போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில், கர்நாடகா பல்கலை அணிகள் வெற்றி பெற்றன.
அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவுடன், சென்னை அமெட் பல்கலை சார்பில், நடப்பாண்டிற்கான தென்மண்டல பல்கலை அணிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டிகள், நேற்று முன்தினம் துவங்கின.
இப்போட்டிகளில், மொத்தம் 90 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டங் களில், கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யா தொழில் நுட்ப பல்கலை அணி, 3 -- 0 என்ற புள்ளி கணக்கில், ஆந்திராவின் நாகர்ஜுனா பல்கலை அ ணியை வென்றது.
மற்றொரு போட்டியில், கர்நாடகாவின் தவாங்கரே பல்கலை அணி, 3 - -0 என்ற புள்ளிக்கணக்கில், ஆந்திரா பல்கலை அணியை வீழ்த்தியது.
அடுத்தடுத்து நடந்த போட்டி களில், கேரளா பல்கலை, கர்நாடகா சட்ட பல்கலை அணிகள் வெற்றி பெற்றன. போட்டிகள் தொ டர்ந்து நடந்து வருகின்றன.

