/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலை மண்டல தடகளம் செயின்ட் ஜோசப் 'சாம்பியன்'
/
பல்கலை மண்டல தடகளம் செயின்ட் ஜோசப் 'சாம்பியன்'
ADDED : மார் 17, 2024 01:17 AM

சென்னை:அண்ணா பல்கலையின் மண்டல தடகள போட்டி, மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், பல்கலைக்கு உட்பட பல்வேறு கல்லுாரி வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி மாணவர்களான ஹரிதாஷ் 10,000 மீ., மற்றும் 5,000 மீ., ஓட்டத்தில் தலா ஒரு தங்கம், சிவ சஞ்சய், 20,000 மீ., ஓட்டத்தில் ஒரு தங்கமும், 5,000 மீ., ஒரு வெள்ளியும் வென்றனர்.
அஜய்குமார், 'ஷாட் புட்'டில் தங்கம், விவின் குமார் 400 மீ., மற்றும் 800 மீ., ஓட்டத்தில் தலா ஒரு தங்கம், ஜோசுவா டேனியல், 4X400 ரிலேவில் தங்கம் வென்று, செயின்ட் ஜோசப் அணியினர் ஓட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை வென்றனர்.
அதேபோல், பெண்களில், செயின்ட் ஜோசப் மாணவியரான சவுமியா, 1,500 மீ., ஓட்டத்தில் தங்கம், மும்முறை தாண்டுதலில் தங்கம்; திரிஷா 800 மீ., தங்கம், மோனிகா 100 மீ., தங்கப் பதக்கங்களை வென்றனர்.
கார்த்திகா 10,0000 மீ., தங்கம்; சஞ்சனா 4X100 மீ., மற்றும் 4X400 மீ., ரிலேவில் தலா ஒரு தங்கம் வென்று, செயின்ட் ஜோசப் அணியினர், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர்.
இருபாலரிலும், சாம்பியன் பட்டங்களை வென்ற கல்லுாரி அணிக்கு, அதன் நிர்வாகம் வெகுவாக பாராடியது.

