/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாலங்களில் எரியாத விளக்குகள் மாதந்தோறும் வீணாகும் வரிப்பணம்
/
மேம்பாலங்களில் எரியாத விளக்குகள் மாதந்தோறும் வீணாகும் வரிப்பணம்
மேம்பாலங்களில் எரியாத விளக்குகள் மாதந்தோறும் வீணாகும் வரிப்பணம்
மேம்பாலங்களில் எரியாத விளக்குகள் மாதந்தோறும் வீணாகும் வரிப்பணம்
ADDED : ஏப் 08, 2025 11:52 PM
குரோம்பேட்டை,சென்னை புறநகர் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக, மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
சாலை மற்றும் மேம்பாலத்தில், விபத்து மற்றும் நெரிசலை தவிர்க்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்த விளக்குகளை, தாம்பரம் மாநகராட்சி மற்றும் கண்டோன்மென்ட் நிர்வாகங்கள் முறையாக பராமரிக்காததால், பல விளக்குகள் எரியாமல், சாலை கும்மிருட்டாக காணப்படுகிறது.
ஏர்போர்ட் மேம்பாலத்தில் ஒரு பக்கம் முழுவதுமாக விளக்குகள் எரியவில்லை. பல்லாவரம் மற்றும் துரைப்பாக்கம் சாலை மேம்பாலங்களில், சாலையில் வெளிச்சம் விழும் வகையில் பொருத்தப்பட்ட விளக்குகள் ஒன்றுகூட எரியவில்லை.
எம்.ஐ.டி., மேம்பாலத்தில், பல கம்பங்களில் விளக்குகளே இல்லை. அந்த கம்பங்களில் பொருத்தப்பட்ட விளக்குகள் உடைந்ததா, திருடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி எல்லையில் உள்ள விளக்குகளை பராமரிக்க, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
அப்படியிருக்கையில், ஏகப்பட்ட விளக்குகள் எரியாமலும், காணாமலும் போய்விட்டது என்பது, பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின் விளக்கு விஷயத்தில், முறைகேடுகள் நடப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இவ்விஷயத்தில், மாநகராட்சி கமிஷனர் நேரிடையாக ஆய்வு செய்து, அதிகாரிகள் செய்யும் முறைகேடுகளை கண்டறிந்து, மின் விளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.