/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அன்மாஸ்க் கேன்சர்' திட்டம் 'அப்பல்லோ'வில் துவக்கம்
/
'அன்மாஸ்க் கேன்சர்' திட்டம் 'அப்பல்லோ'வில் துவக்கம்
'அன்மாஸ்க் கேன்சர்' திட்டம் 'அப்பல்லோ'வில் துவக்கம்
'அன்மாஸ்க் கேன்சர்' திட்டம் 'அப்பல்லோ'வில் துவக்கம்
ADDED : பிப் 03, 2024 12:55 AM
சென்னை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாக பாதிக்கப்படும் பட்சத்தில், அவற்றில் இருந்து மீள்வதற்கான, 'அன்மாஸ்க் கேன்சர்' திட்டத்தை, அப்பல்லோ மருத்துவ குழுமம் துவக்கி உள்ளது.
இதுகுறித்து, அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் மார்பகம், தலை, கழுத்து பிரிவு இயக்குனர் சப்னா நாங்கியா கூறியதாவது:
புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டம் மக்களிடம் உள்ளது. இவற்றை மாற்றவும், புற்றுநோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், 'அன்மாஸ்க் கேன்சர்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தங்களது வாழ்க்கை முறை, குடும்பத்தின் ஆதரவு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்கின்றனர்.
அத்துடன், புற்றுநோயில் இருந்து மீண்டோருக்கு எதிரான பாகுபாடு, உதாசீனம், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை நீக்கி, மனம் மற்றும் உணர்வு ரீதியிலான நலத்தில் கவனம் செலுத்த, இத்திட்டம் உதவும். இதற்காக, https://www.apollohospitals.com/cancer-treatment-centres/unmask-cancer/ என்ற இணையதளத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

