/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ்காரருக்கு மிரட்டல் நா.த., பிரமுகர் கைது
/
போலீஸ்காரருக்கு மிரட்டல் நா.த., பிரமுகர் கைது
ADDED : மே 19, 2025 01:05 AM
புதுவண்ணாரப்பேட்டை,:புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸ்காரர் ஜெயகுமார், 42. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, குறுக்கு சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் மது வாங்கி அருந்திய வாலிபர், பாட்டிலை சாலையில்வீசினார். இது குறித்து ஜெயகுமார் தட்டிக்கேட்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின், அந்த வாலிபர் பைக்கை எடுத்து அங்கிருந்து செல்ல முயன்றபோது, மற்றொரு பைக்கில் மோதி கீழே விழுந்தார்.
அப்போது, அந்த வாலிபரை துாக்கி விட ஜெயகுமார் முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், 'என்னை ஏன் பின் தொடர்கிறாய்' எனக்கூறி மீண்டும் ஜெயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாரின் விசாரணையில், மிரட்டல் விடுத்தது புதுவண்ணாரப்பேட்டை, பர்மா காலனியைச் சேர்ந்த ஷேக் காலிசா, 37, என்பதும், நாம் தமிழர் கட்சி பிரமுகர் என்பதும் தெரிய வந்தது. போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.