/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பஸ்களில் யு.பி.ஐ., முறை ஆய்வு
/
மாநகர பஸ்களில் யு.பி.ஐ., முறை ஆய்வு
ADDED : நவ 22, 2024 12:35 AM
சென்னை, மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யு.பி.ஐ., வாயிலாக பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் முறை சரியாக பின்பற்றப்படுகிறதா என, ஆய்வு செய்யப்பட உள்ளது.
எம்.டி.சி., மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 28ம் தேதி, மின்னணு பயணச்சீட்டுக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக யு.பி.ஐ., பரிவர்த்தனை, டெபிட் கார்டு பரிவர்த்தனை செய்வது, மிகவும் குறைவாக உள்ளது.
இதுகுறித்து இன்றும், நாளையும் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், 20 பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வின் போது, நடத்துனர்களிடம் யு.பி.ஐ., அல்லது டெபிட் கார்டு வாயிலாக பயணச்சீட்டு பெற்றுக் கொள்வர்.
இதில், டிஜிட்டல் பரிவர்த்தனை முறை பின்பற்றப்பட்டு, செயல்படுகிறதா என்பது குறித்து கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.