/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தன்னை தானே தாக்கிய பெண்ணால் சலசலப்பு
/
தன்னை தானே தாக்கிய பெண்ணால் சலசலப்பு
ADDED : ஆக 12, 2025 12:55 AM
கோயம்பேடு, கோயம்பேடில், தன்னை தானே தாக்கிய இளம்பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு, காளியம்மன் கோவில் தெருவில், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், திடீரென சத்தமாக பேசியபடி தன்னை தானே தாக்கிக் கொண்டார். அவ்வழியாக சென்றோர், அப்பெண்ணிடம் விசாரித்தபோது, ஆவேசமாக சத்தம் போட்டுள்ளார்.
இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அப்பெண்ணிடம் பேசினர்.
திடீரென அப்பெண், போலீசாரின் சீருடையை பிடித்து இழுத்து உள்ளார். மேலும், அப்பெண்ணிடம் இருந்த மொபைல் போனை வாங்கி, அதில் இருந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். இதையடுத்து, அங்கு வந்த அப்பெண்ணின் பெற்றோர், அவரை அழைத்துச் சென்றனர்.
மன உளைச்சல் காரணமாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இது தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
அந்த பெண் மன உளைச்சல் செய்தாரா அல்லது போதையில் செய்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.