/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் சேகரிப்புடன் கூடிய வடிகால் பெசன்ட் நகரில் அமைக்க வலியுறுத்தல்
/
மழைநீர் சேகரிப்புடன் கூடிய வடிகால் பெசன்ட் நகரில் அமைக்க வலியுறுத்தல்
மழைநீர் சேகரிப்புடன் கூடிய வடிகால் பெசன்ட் நகரில் அமைக்க வலியுறுத்தல்
மழைநீர் சேகரிப்புடன் கூடிய வடிகால் பெசன்ட் நகரில் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 26, 2025 11:58 PM
பெசன்ட்நகர், அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதிகள் கடற்கரை அருகில் உள்ளதால், மணல் பரப்பாக இருக்கும்.
இங்கு சேரும் மழைநீர் எளிதில் பூமிக்குள் சென்றுவிடும். ஏற்கனவே கட்டிய வடிகால்களில் சேரும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
பெரும்பாலான வடிகால்களில் கழிவுநீர் செல்கிறது. பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதிகளை விட, எல்.பி., சாலை உயரமாக உள்ளதால், நீரோட்டம் தடைப்பட்டு, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், பெசன்ட் அவென்யூ, பத்மநாபா நகர், ஜீவரத்தினம் நகர், சாஸ்திரி நகரில், 14 தெருக்களில் உள்ள பழைய வடிகால்களை இடித்துவிட்டு, புதிய வடிகால் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 11.28 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மழைநீர் எளிதில் பூமிக்குள் இழுக்கும் மணல் பரப்பான பகுதியானதால், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் வடிகால் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தினர்.
அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சில ஆண்டுக்கு முன், பெசன்ட் நகர், சாஸ்திரி நகரில் ஜெர்மன் டெக்னாலஜியில் பெரிய அளவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைக்கப்பட்டது. அவை, நல்ல பயன் அளித்தது.
திருவான்மியூரில், வடிகாலுக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டப்பட்டது. அதுபோல், புதிதாக கட்டப்பட உள்ள வடிகால்களிலும் அமைத்தால், தேவையான நீர் பூமிக்குள் செல்லும். மீதமுள்ள நீர் வடிகாலில் செல்லும்.
குறுகலான தெருக்களில், வடிகாலுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது சிறந்தது. வடிகால் மட்டும் கட்டினால், அதில் கழிவுநீர் தான் செல்லும்.
வடிகாலுக்காக செலவு செய்யும், 11 கோடி ரூபாயை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.