/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் பாலம்
/
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் பாலம்
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் பாலம்
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் பாலம்
ADDED : ஜூன் 26, 2025 12:24 AM

சென்னை, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில், நான்கு ஆண்டுகளில் பல்வேறு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், கோடம்பாக்கம் மண்டலம், 133 மற்றும் 141வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை, சி.ஐ.டி., நகர் பிரதான சாலையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், 164.92 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மேம்பாலம், தெற்கு உஸ்மான் சாலை, பர்கிட் சாலை, மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை, தென்மேற்கு போக் சாலை, நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலம் 1.2 கி.மீ., நீளம் மற்றும் 8.40 மீ., அகலத்தில் இருவழிப்பாதையாக அமைக்கப்படுகிறது.
சி.ஐ.டி., நகர் பிரதான சாலையில் 140 மீ., உஸ்மான் சாலையில் ஏறுவதற்கு 120 மீ., இறங்குவதற்கு 100 மீ., நீளத்தில் அமைக்கப்படுகிறது.
இரண்டு புறமும், 4 மீ., அணுகு சாலைகள் மற்றும் இருமுனைகளிலும், 1.5 மீ., நடைபாதைகளுடன், 53 துாண்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மேம்பால பணிகள் முடிவடைந்தபின், 2 லட்சம் மக்கள் பயன்பெறுவர். தினமும், 40,000 வாகனங்கள், பாலத்தை பயன்படுத்த உள்ளன.
இப்பால பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதால், விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்தது.