/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
30,300 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி ஜன., 3ல் துவக்கம்
/
30,300 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி ஜன., 3ல் துவக்கம்
30,300 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி ஜன., 3ல் துவக்கம்
30,300 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி ஜன., 3ல் துவக்கம்
ADDED : டிச 27, 2024 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கால்நடைகளின் கால் மற்றும் வாய் பகுதிகளை தாக்கும் கோமாரி நோயால், இறப்பு ஏற்படுகிறது. கால்நடைகள் இறப்பை தடுக்க சென்னை மாவட்டத்தில் உள்ள, 30,300 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, வரும் ஜன., 3 முதல், 31ம் தேதி வரை, தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. கால்நடை உரிமையாளர்கள், தங்களது பசு, எருதுகள், எருமைகள், நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, தடுப்பூசியை தவறாது போட்டுக் கொள்ள வேண்டும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.