/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி ஆண்டவர் கோவில் அசரவைத்த அபிராமி அலங்காரம்
/
வடபழனி ஆண்டவர் கோவில் அசரவைத்த அபிராமி அலங்காரம்
ADDED : அக் 07, 2024 01:09 AM
வடபழனி:வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா 'சக்தி கொலு' எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா 4ம் நாளான நேற்று மாலை, சக்தி கொலுவில் அம்பாள், அபிராமி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது. மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது. நேற்று மாலை ஸ்ரீநிதி, நிருபமா மற்றும் ஓம்சக்தி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, ஓதுவார் குழுவினரின் திருமுறை பாராயணம் நடந்தது.
இரவு 7:00 மணி முதல் அபிேஷக் ராஜு குழுவினரின் பக்தி பாடல்கள் இசைக்கச்சேரி நடந்தது. பக்தர்களுக்கு, அம்மன், முருகன், நுால், விபூதி, குங்குமம், அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பை வழங்கப்பட்டது.
மேலும், கொலு கண்காட்சி நேரத்தில் ஆன்மிக வினாடி - வினாவில், பங்கேற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.