/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவில் சாலை ஆக்கிரமிப்பால் அவதி
/
வடபழனி முருகன் கோவில் சாலை ஆக்கிரமிப்பால் அவதி
ADDED : டிச 17, 2025 05:36 AM

வடபழனி: வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலையின் இருபுறமும், நடைபாதை ஆக்கிரமிப் பால் பக்தர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
வடபழனி முருகன் கோவில், சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. இங்கு, வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
சென்னை, ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக ஆண்டவர் தெரு உள்ளது.
இந்த தெருவின் இருபுறமுள்ள நடைபாதை மற்றும் சாலையில் பூ, மாலை, தேங்காய் விற்பனை கடைகள், உணவு கடைகள், ஆங்காங்கே முளைத்துவிடுகின்றன. மேலும், பலர் சாலையையே ஆக்கிரமித்து கடை விரிக்கின்றனர்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும், சகட்டுமேனிக்கு சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, வடபழனி முருகன் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

