/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாமோதர பெருமாள் கோவிலில் துவங்கியது வைகாசி பெருவிழா
/
தாமோதர பெருமாள் கோவிலில் துவங்கியது வைகாசி பெருவிழா
தாமோதர பெருமாள் கோவிலில் துவங்கியது வைகாசி பெருவிழா
தாமோதர பெருமாள் கோவிலில் துவங்கியது வைகாசி பெருவிழா
ADDED : மே 17, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம்:வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், இந்தாண்டு வைகாசி பெருவிழா, நேற்று மாலை 6:00 மணிக்கு, செல்வ பல்லக்கு உத்சவத்துடன் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன், உள்புறப்பாடு நடந்தது.
இன்று மாலை, அங்குரார்ப்பணம் கேடயம், நாளை காலை கொடியேற்றத்துடன் திருவீதி புறப்பாடு நடக்கவுள்ளது.
மாலை சிம்மவாகனம் உத்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 28ம் தேதி வரை, காலையும் மாலையும், பிரம்மோற்சவம் நடக்கவுள்ளன.