/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவம் ஆட்டுக்கிடா வாகன புறப்பாடு
/
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவம் ஆட்டுக்கிடா வாகன புறப்பாடு
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவம் ஆட்டுக்கிடா வாகன புறப்பாடு
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவம் ஆட்டுக்கிடா வாகன புறப்பாடு
ADDED : ஜூன் 03, 2025 12:19 AM

சென்னை, வடபழனி முருகன் கோவிலில், வைசாகி விசாக பிரம்மோத்வத்தின் மூன்றாம் நாளான நேற்று, ஆட்டுக்கிடா வாகனத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடபழனியில் அமைந்துள்ள முருகப் பெருமான் கோவில் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாள் பிரம்மோத்சவ விழா, 31ம் தேதி கொடியேற்றத்துடன் நடந்தது.
மூன்றாம் நாளான நேற்று இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில், வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு நாக வாகனத்திலும் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார்.
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நாளை இரவு 7:00 மணிக்கும், வரும், 5ம் தேதி இரவு யானை வாகன புறப்பாடும் நடக்கிறது. பிரம்மோத்சவத்தின் பிரதான நாளான, 6ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது.
அன்று காலை 5:00 மணி முதல் 6;20 மணிக்குள் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. வரும், 7ம் தேதி இரவு குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. வரும், 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடபழனி முருகப் பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகாசி விசாகமான, 9ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகர் விதிஉலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உத்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. பின், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது. வரும், 10ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது.
வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் வரும், 11ம் தேதி முதல், 20ம் தேதி வரை தினமும் மாலை நடக்கிறது. இதில், பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன.