/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வைகுண்டவாச பெருமாளுக்கு கும்பாபிஷேகம்
/
வைகுண்டவாச பெருமாளுக்கு கும்பாபிஷேகம்
ADDED : பிப் 11, 2025 01:15 AM

கோயம்பேடு,கோயம்பேடில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவிலை சீரமைக்கும் பணிகள், சில ஆண்டுகளாக நடந்து வந்தன.
அதன்படி, நுாதன ஐந்து நிலை ராஜகோபுரம், வெளிப் பிரகாரத்தில் கருங்கல் தரை, ஆண்டாள் மற்றும் தாயார் சன்னிதி மண்டபங்களில் உள்ள துாண்களை அழகுப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் துவக்கப்பட்டன.
தவிர, கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு புதிய மகா மண்டபம் கட்டும் பணிகளும் துவக்கப்பட்டு, கடந்த மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்தன.
இந்நிலையில், கோவிலுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 8, 9ம் தேதிகளில் பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன.
நேற்று காலை 9:30 மணிக்கு, அனைத்து விமானங்களுக்கும், ராஜகோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, ஸ்ரீ வைகானஸ பகவத் வாஸ்த்ர ஆகம முறைப்படி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, வைகுண்டவாச பெருமாளை தரிசித்தனர்.
பின், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் இரவு 8:30 மணிக்கு சுவாமி சேஷவாகனம் வீதி புறப்பாடு நடைபெற்றது.