ADDED : ஜன 03, 2025 11:58 PM
- நாஞ்சில் சம்பத்
'ஒன்றே முக்காலும் நாலும்' என்ற தலைப்பில், நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
உலக இலக்கியங்களில் எது சிறந்தது என போட்டி வைத்தால், அதில் தமிழர்களின் பண்பாட்டோடு கலந்து நிற்கும் திருக்குறள், முதலிடம் பெற்றுவிடும்.
ஒன்றே முக்கால் அடியில் உலகத்தை அளந்து, உரைத்தான் வள்ளுவன். நம் அறிவின் அடையாளமாக திருக்குறள் உள்ளது.
திருக்குறளில் ஜாதி, மதம், இனம், மொழி என, மனிதர்களைப் பிரிக்கும் எந்த சொல்லும் இடம் பெறவில்லை.
ஆனால், 'உலகு' என்ற சொல் மட்டும் 63 இடங்களில் வருகிறது. அதனால்தான், விவிலியத்திற்கு அடுத்தபடியாக, அதிக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
காமத்துப் பால் வாயிலாகவும் அறத்தை வளர்த்துள்ள வள்ளுவர் சகலகலா வல்லவர். காலங்கள் எனும் நெடிய வரப்புகளைத் தாண்டியும் வளர்ந்து நிற்கும் திருக்குறளை வளர்க்க தனி இயக்கம் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

