ADDED : ஜூன் 25, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி, 26; வேன் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் மாலை அம்பேத்கர் கல்லுாரி சாலை அருகே, குடிநீர் வாரிய பணிக்காக, தன் வேனில் கம்பிகளை ஏற்றிச் சென்றார். அப்போது, போதையில் வந்த இருவர் கத்தியால், வேன் கண்ணாடியை உடைத்து சென்றனர்.
இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்தனர். இதில், கண்ணாடியை உடைத்தது புளியந்தோப்பைச் சேர்ந்த அப்துல், 28, மற்றும் விக்னேஷ், 25, என்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும், பேசின்பாலம் காவல்நிலைய எல்லையில் மாவா விற்ற வழக்கில், தேடப்பட்டு வந்த வினோத்குமார், 36, என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.