/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வானகரம் பிரதான சாலை சீரமைப்பு எல்லை பிரச்னையால் சீரமைப்பு சிக்கல்
/
வானகரம் பிரதான சாலை சீரமைப்பு எல்லை பிரச்னையால் சீரமைப்பு சிக்கல்
வானகரம் பிரதான சாலை சீரமைப்பு எல்லை பிரச்னையால் சீரமைப்பு சிக்கல்
வானகரம் பிரதான சாலை சீரமைப்பு எல்லை பிரச்னையால் சீரமைப்பு சிக்கல்
ADDED : மே 20, 2025 01:45 AM

வானகரம், மாநகராட்சி ஊராட்சி எல்லையில் உள்ள வானகரம் பிரதான சாலை, குண்டும் குழியுமாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலை மற்றும் தாம்பரம் - மதுரவாயல் சர்வீஸ் சாலையை இணைப்பது வானகரம் பிரதான சாலை.
இச்சாலை, வானகரம் ஊராட்சி மற்றும் சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டல எல்லையில் உள்ளது.
வானகரம் ஊராட்சி பராமரிப்பில் உள்ள இச்சாலை, பல ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டது.
கான்கிரீட் சாலை ஆங்காங்கே பெயர்ந்து, பல்லாங்குழி போல் மாறிவிட்டது. குடிநீர் வாரியம் மற்றும் மின் வாரிய பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால், சாலை கரடு முரடாகிவிட்டது.
இதனால், இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், முதுகுவலியால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இச்சாலையின் இருபுறம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
தற்போது, வானகரம் ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால், அரசு ஆணை வந்துள்ளது.
ஆனால், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.
மாநகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ இச்சாலையை முறையாக சீர் செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
***