/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வஞ்சிரம் ரூ.1,000; இறால் 500 காசிமேடில் கோலாகலம்
/
வஞ்சிரம் ரூ.1,000; இறால் 500 காசிமேடில் கோலாகலம்
ADDED : அக் 14, 2024 02:56 AM

காசிமேடு:புரட்டாசி மாத கடைசி வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காசிமேடில் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திருவிழாக் கூட்டம் போல் மீன்கள் வாங்க மக்கள் கூடுவர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தோர் என, அதிகாலை முதலே கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், பெருமாளுக்கு புரட்டாசி உகந்த மாதம் என்பதால் பலர், புரட்டாசி மாதத்தில் இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்பது கிடையாது.
ஆனால், புரட்டாசி கடைசி வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சென்னை காசிமேடு துறைமுகத்தில், மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கரை திரும்பின. சங்கரா, கானாங்கத்த உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகம் இருந்தது.
மக்கள் கூட்டம் இருந்ததால், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மீன் வியாபாரிகள் கூறுகையில்,''மீன் வரத்து போதிய அளவு இருந்தும், சிறிய பாறை மீன்கள் அதிக அளவில் தேக்கமடைந்தன. இதனால், ஒரு கூடை மீன் 300 ரூபாய்க்கு, விற்பனையானது,'' என்றனர்.