/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரமகாலட்சுமி சில்க்ஸ் 6வது கிளை திறப்பு
/
வரமகாலட்சுமி சில்க்ஸ் 6வது கிளை திறப்பு
ADDED : டிச 31, 2024 12:30 AM

சென்னை, ஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின், ஆறாவது புதிய கிளை, அடையாறில் திறக்கப்பட்டு உள்ளது.புதிய கிளையை, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.
இங்கு பனாரசி, படோலா கோட்டா, காஞ்சிபுரம், பைத்தானி உள்ளிட்ட பல்வேறு புடவைகளின், பிரீமியம் தயாரிப்புகள் உள்ளன.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான வடிவமைப்புகள் உள்ளன. வெவ்வேறு விலைகளில், பல்வேறு தயாரிப்பு ஆடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
கைத்தறி புடவை வியாபாரத்தை புதுப்பித்து, காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மற்றும் பிற கைத்தறி புடவைகளை, ஒரு குடையின் கீழ் வழங்குகிறது.
சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட், நிர்வாக இயக்குநர் பிரசாத் சலாவடி கூறுகையில், ''வரமகாலட்சுமி கிளைகள், தனித்துவமான அனுபவம் மற்றும் சேவையை வாடிக்கையாளருக்கு வழங்குகிறது.
காஞ்சிபுரத்தின் கலாச்சார வேர்களை கொண்டுள்ளது. தென்னிந்தியா முழுதும் 25 கூடுதல் கிளைகளை, அடுத்த இரு நிதியாண்டுகளில் திட்டமிட்டு உள்ளோம்,'' என்றார்.