/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு
/
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு
ADDED : ஆக 29, 2025 12:16 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில் நுகர்வோர் மற்றும் வியாபாரிகளின் வரத்து குறைந்ததால், காய்கறிகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து உள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் மூகூர்த்த நாட்களையடுத்து, கோயம்பேடு சந்தையில் காய்கறி வரத்து அதிகமாக இருந்தது.
நேற்று மட்டும், 7,000 டன் காய்கறிகள் வந்தன. ஆனால், நுகர்வோர் மற்றும் வியாபரிகள் வரத்து குறைந்து, போதிய விற்பனை இன்றி, அனைத்து காய்கறிகள் விலையும் 5 - 10 ரூபாய் குறைந்து விற்பனையானது.
இதையடுத்து, நேற்று முன்தினம் 60 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, நேற்று கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல, வெங்காயம் 6 ரூபாய் குறைத்து 24 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 50 ரூபாய்க்கும், கேரட் கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கும் விற்பனையாயின.

