ADDED : டிச 24, 2024 12:48 AM
சென்னை, மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் மழையால், பல மாவட்டங்களில் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, பலவகை காய்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
தக்காளி, வெங்காயம் விலை சற்று குறைந்து வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் பெரும்பாலான காய்கறிகள் ஒரு கிலோ, 60 ரூபாய் முதல் விற்கப்படுவதால், குடும்ப செலவு அதிகரித்து வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
விலை பட்டியல் விவரம்:
காய்கறி - கிலோ - நவம்பர் - டிசம்பர் விலை, ரூபாயில்
பெரிய வெங்காயம்-60-30
சின்ன வெங்காயம்-70-60
தக்காளி-25-15
கேரட்-50-60
பீன்ஸ்-45-60
பீட்ரூட்-45-60
உருளைக்கிழங்கு-30-33
கத்தரிக்காய்-25-35
வெண்டைக்காய்-20-40
சேனைக்கிழங்கு-55-60
சேப்பங்கிழங்கு-30-40
முருங்கைக்காய்-200-180
பாகற்காய்-30-40
முள்ளங்கி-25-30
இஞ்சி-100-60
குடைமிளகாய்-30-65
அவரைக்காய்-30-50
பச்சைமிளகாய்-35-45
புடலங்காய்-20-40
***