/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தினமலர்' வாங்காத நுாலகர் வேளச்சேரி வாசகர்கள் தவிப்பு
/
'தினமலர்' வாங்காத நுாலகர் வேளச்சேரி வாசகர்கள் தவிப்பு
'தினமலர்' வாங்காத நுாலகர் வேளச்சேரி வாசகர்கள் தவிப்பு
'தினமலர்' வாங்காத நுாலகர் வேளச்சேரி வாசகர்கள் தவிப்பு
ADDED : பிப் 04, 2025 12:20 AM
வேளச்சேரி, தண்டீஸ்வரம் பகுதியில், முழுநேர நுாலகம் உள்ளது. பல ஆண்டுகளாக, இங்கு 'தினமலர்' உள்ளிட்ட நாளிதழ்கள் இருந்தன.
கடந்த ஆண்டில் இருந்து, 'தினமலர்' நாளிதழ் வாங்குவதில்லை. நுாகலகரிடம் கேட்டால், மேல் அதிகாரிகள் 'தினமலர்' வாங்க வேண்டாம் என, கூறியதாக தெரிவித்தார்.
அவர் கூறிய மேல் அதிகாரியிடம் கேட்டால், முறையான பதில் இல்லை. இரண்டு மணி நேரம் செயல்படும் கிளை நுாலகங்களே 'தினமலர்' வாங்கும்போது, இந்த முழு நேர நுாலகத்தில் 'தினமலர்' வாங்காதது அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.
இதனால், நாட்டு நடப்புகளை நடுநிலையோடு வாசிக்க முடியாமல் திணறுகிறோம். பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, 'தினமலர்' நாளிதழ் வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நுாலக வாசிப்பாளர்கள், வேளச்சேரி.