/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி சீதாராம் நகர் வடிகால்வாய்கள் 5 ஆண்டாக துார் வாரப்படாதது அம்பலம் பொய் கணக்கு காட்டி நிதியை 'அமுக்கிய' நெ.சா.துறை

ADDED : அக் 16, 2025 12:53 AM

வேளச்சேரி: அதிக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் வேளச்சேரியில், நெடுஞ்சாலைத் துறையினர் ஐந்து ஆண்டுகளாக வடிகால்வாய்களில் துார் வாராதது, நம் நாளிதழ் செய்தியால் வெளிச்சத்துக்கு வந்தது.
வேளச்சேரி, சீதாராம் நகர் சாலை, வேளச்சேரி பிரதான சாலையை விட, ஒரு அடி தாழ்வாக உள்ளது. அதேபோல், இந்த நகரில் உள்ள வடிகால்வாய், பிரதான சாலையில் உள்ள வடிகால்வாயை விட பள்ளமாக உள்ளது.
இதனால், ஒவ்வொரு பருவமழைக்கும் பிரதான சாலையில் வடியும் வெள்ளம், நகர் வழியாக வீடுகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. வடிகால்வாயில் கழிவுநீர் செல்வதுடன், குப்பை, பிளாஸ்டிக்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
வடிகால்வாயில் ஜல்லடை அமைக்காததால், மழைநீருடன் மண், கல், குப்பை சேர்ந்து, அடைப்பு மேலும் அதிகரிக்கிறது. இதனால், நகரில் இருந்து வடிகால்வாய் வழியாக மழைநீர் செல்லவில்லை. மாறாக, பிரதான சாலையில் இருந்து பின்னோக்கி பாய்கிறது.
இது குறித்து, நம் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, அடையாறு மண்டல அதிகாரிகள் வடிகால்வாய்களை ஆய்வு செய்தனர்.
இதில், விஜயநகர் சந்திப்பு முதல் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் வரை, 900 மீட்டர் வடிகால்வாய்கள் ஐந்து ஆண்டுகளாக துார்வாரப்படாதது தெரிந்தது. 3 அடி ஆழ வடிகால்வாயில், 2 அடி ஆழத்திற்கு அடைப்பு இருப்பது தெரிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன், வடிகால்வாய்களை துார் வார பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இங்கு, ஐந்து ஆண்டுகளாக துார் வாராமல், பொய் கணக்கு காட்டி பணத்தை 'அமுக்கியது' வெளிச் சத்துக்கு வந்துள்ளது.