/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய பள்ளிகளுக்கான செஸ் வேலம்மாள் அணி சாதனை
/
தேசிய பள்ளிகளுக்கான செஸ் வேலம்மாள் அணி சாதனை
ADDED : ஜன 29, 2025 12:08 AM

திருவள்ளூர்,
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், சி.பி.எஸ்.இ., கேந்திர வித்யாலயா, இதர மத்திய பள்ளி வாரியங்கள் உள்ளிட்ட தேசிய பள்ளி அணிகளுக்கான 68வது தேசிய சதுரங்க போட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நந்தத் மாவட்டத்தில் நடந்தது.
இதில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், தமிழகம், குஜராத் உட்பட 20 மாநில அணிகள், நான்கு யூனியன் பிரதேச அணிகள் உட்பட, 33 அணிகள் பங்கேற்றன.
தமிழகம் சார்பில் சென்னை, ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணியும் பங்கேற்றது. அந்த அணியில், கவின், கிஷோர் பிரஜித், நிஜேஷ், பரிதி நாராயண் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள், தங்களை விட அதிக 'ரேட்டிங்' உடைய மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அணிகளை வீழ்த்தி, ஒரு தோல்வியும் அடையாமல், சி.பி.எஸ்.இ., வாரியத்திற்கு முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி, வரலாற்று வெற்றியை பதிவு செய்தனர்.
இதற்கு முன், கடந்த அக்டோபர் மாதம், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த சி.பி.எஸ்.இ., பள்ளி அணிகளுக்கான தேசிய சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்ற ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி, தேசிய பள்ளிகளுக்கான போட்டியில் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

