/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலம்மாள் பள்ளி மாணவி செஸ் தொடரில் முதலிடம்
/
வேலம்மாள் பள்ளி மாணவி செஸ் தொடரில் முதலிடம்
ADDED : ஜன 04, 2026 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆனந்தி செஸ் அகாடமி சார்பில், ஐந்தாவது சர்வதேச செஸ் ஓபன் தொடர், மதுரை, அழகர்கோவிலில் உள்ள வெல்பா வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில் 100க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், சென்னை சார்பில், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி அனுஷா பங்கேற்றார்.
1,500க்கு உட்பட்ட தரவரிசைப் புள்ளிச்சுற்றில் போட்டியிட்ட அனுஷா, 16, தன் அசத்தலான திறமையை வெளிப்படுத்தி 1,490 ரேட்டிங் எடுத்து 6 புள்ளிகளுடன் பிரிவின் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
வெற்றி பெற்ற அனுஷாவுக்குக் கோப் பை, 50,000 ரூபாய் பரிசுத்தொகை மற் றும் புதிய கார் பரிசா க வழங்கப்பட்டது.

