/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கோப்பை கூடைப்பந்து வேலம்மாள் அணி முதலிடம்
/
முதல்வர் கோப்பை கூடைப்பந்து வேலம்மாள் அணி முதலிடம்
முதல்வர் கோப்பை கூடைப்பந்து வேலம்மாள் அணி முதலிடம்
முதல்வர் கோப்பை கூடைப்பந்து வேலம்மாள் அணி முதலிடம்
ADDED : ஆக 29, 2025 10:20 PM

சென்னை, முதல்வர் கோப்பைக்கான திருவள்ளூர் மாவட்ட கூடைப்பந்து போட்டியில், மாணவியரில் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் அணி முதலிடம் பிடித்தது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான திருவள்ளூர் மாவட்ட கூடைப்பந்து போட்டி, சென்னை ஐ.சி.எப்.,பில் நேற்று நிறைவடைந்தது.
மாணவரில், 23 பள்ளிகள், மாணவியரில், 13 பள்ளிகளை சேர்ந்த, 36 அணிகள் பங்கேற்றன. மாணவியருக்கான இறுதிப் போட்டியில், மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் 'ஏ' அணி, 31 - 20 என்ற கணக்கில், பருத்திப்பட்டு வேலம்மாள் அணியை தோற்கடித்து முதலிடம் பிடித்தது.
மூன்றாம் இடத்தை, சேவலாயா பள்ளி, 26 - 16 என்ற கணக்கில், மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் 'பி' அணியை தோற்கடித்து கைப்பற்றியது.
மாணவரில் பொன்னேரி வேலம்மாள் சர்வதேச 'ஏ' அணி, 45 - 36 என்ற கணக்கில் வேலம்மாள் சர்வதேச 'பி' அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
கல்லுாரி பிரிவில், மாணவியரில் ஆர்.எம்.டி., முதலிடத்தையும், பனிமலர் இரண்டாம் இடம் பிடித்தன. மாணவரில், எஸ்.ஏ., கல்லுாரி முதலிடத்தையும், ஆர்.எம்.கே., அணி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின.