/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கு இடையே கூடைப்பந்து வேலம்மாள் வித்யாலயா முதலிடம்
/
பள்ளிகளுக்கு இடையே கூடைப்பந்து வேலம்மாள் வித்யாலயா முதலிடம்
பள்ளிகளுக்கு இடையே கூடைப்பந்து வேலம்மாள் வித்யாலயா முதலிடம்
பள்ளிகளுக்கு இடையே கூடைப்பந்து வேலம்மாள் வித்யாலயா முதலிடம்
ADDED : நவ 23, 2025 02:12 AM

சென்னை: பள்ளிகளுக்கு இடையேயான மாணவியர் கூடைப்பந்து போட்டியில், மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, முதலிடத்தை கைப்பற்றியது.
வண்டலுார் அடுத்த வேங்கம்பாக்கத்தில், 'பிட் ஜி' எனும் தனியார் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, அதன் வளாகத்தில் நேற்று நடந்தது.
போட்டியில், மாணவியர் பிரிவில் ஏழு அணிகள் பங்கேற்றன. 'நாக் - அவுட்'முறையில் நடந்த போட்டியின் அரையிறுதியில், மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணி, 30 - 16 என்ற கணக்கில் பருத்திப்பட்டு வேலம்மாள் பள்ளி அணியை தோற்கடித்தது.
நேற்று மாலை நடந்த இறுதிப் போட்டியில், நுங்கம்பாக்கம் பி.எஸ்.பி.பி., - மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தில், 36 - 22 என்ற கணக்கில், வேலம்மாள் வித்யாலயா அணி வெற்றி பெற்று முதலிடத்தை கைப்பற்றியது.