/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலம்மாள், வேல்ஸ் பள்ளி கால்பந்து போட்டியில் அபாரம்
/
வேலம்மாள், வேல்ஸ் பள்ளி கால்பந்து போட்டியில் அபாரம்
வேலம்மாள், வேல்ஸ் பள்ளி கால்பந்து போட்டியில் அபாரம்
வேலம்மாள், வேல்ஸ் பள்ளி கால்பந்து போட்டியில் அபாரம்
ADDED : பிப் 14, 2025 12:19 AM

சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், நேற்றைய, 'லீக்' ஆட்டத்தில், வேலம்மாள் மற்றும் வேல்ஸ் பள்ளிகள் வெற்றி பெற்றன.
சென்னையின் எப்.சி., -- இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., கிளப்புகள் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளை, சென்னையில் நடத்தி வருகின்றன.
இதில், 12, 14 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கு மட்டும் போட்டிகள்நடக்கின்றன.
இப்போட்டியில், இரு பிரிவிலும், தலா, 32 அணிகள் என, மொத்தம் 64 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்றைய, 'லீக்' ஆட்டங்கள், பெரம்பூர் டான் பாஸ்கோபள்ளி மைதானத்தில் நடந்தது. முதல் ஆட்டத்தில், முகப்பேர் வேலம்மாள் மற்றும் பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் துவக்கத்தில் இருந்து, வேலம்மாள் அணி ஆதிக்கம் செலுத்தி, கிடைக்கும் வாய்ப்புகளை கோலாக மாற்றியது.
அதேசமயம், எதிர் அணியிடம் பந்து சென்றாலும், சிறப்பான தடுப்பாட்டத்தால், ஒரு கோலை கூட அடிக்காவிடாமல், டான் பாஸ்கோ திறமையாக விளையாடியது. முடிவில், 5 - 0 என்ற கணக்கில் வேலம்மாள் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், தாழம்பூர் வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி, 1 - 0 என்ற கணக்கில், காஞ்சிபுரம் ஏகாமபரநாதர் பள்ளியை தோற்கடித்துவெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

