/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளாங்கண்ணியிலும் சிறப்பு பாதை: உதயநிதி
/
வேளாங்கண்ணியிலும் சிறப்பு பாதை: உதயநிதி
ADDED : அக் 28, 2024 01:49 AM

சென்னை:“சென்னையை தொடர்ந்து, வேளாங்கண்ணி கடற்கரையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு கடற்கரை பாதை அமைக்கப்படும்,” என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு 'மரப்பலகை பாதை' அமைக்கும் பணியை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம், மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை, முதல்வர் செயல்படுத்தி வருகிறார். சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி கடலை ரசிக்க, 2022ம் ஆண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை திறக்கப்பட்டது.
மெரினாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பெசன்ட் நகர் கடற்கரையில், 1.61 கோடி ரூபாயில், மாற்றுத் திறனாளிகளுக்கான கடற்கரை பாதை அமைக்கும்பணி நடந்து வருகிறது. தற்போது, 40 சதவீத பணிகள் முடிந்துள்ளன. பொங்கலுக்கு முன் பயன்பாட்டிற்கு வரும்.
திருவான்மியூர் கடற்கரையிலும் விரைவில் சிறப்பு பதை அமைக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கடற்கரையிலும், சிறப்பு பாதை அமைக்கும் பணி ஒரு மாதத்தில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.