/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச சிலம்ப போட்டியில் வெங்கடேஸ்வரா பல்கலை மாணவி சாதனை
/
சர்வதேச சிலம்ப போட்டியில் வெங்கடேஸ்வரா பல்கலை மாணவி சாதனை
சர்வதேச சிலம்ப போட்டியில் வெங்கடேஸ்வரா பல்கலை மாணவி சாதனை
சர்வதேச சிலம்ப போட்டியில் வெங்கடேஸ்வரா பல்கலை மாணவி சாதனை
ADDED : மே 06, 2025 11:41 PM
செங்குன்றம்,
மேற்காசிய நாடான கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் நடந்த சர்வதேச சிலம்பப் போட்டியில்,
ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலை மாணவி, ஜெர்ஷிதா சாம்பியன் பட்டம் வென்று, சாதனை படைத்தார். கல்லுாரியில் இவருக்கு பாராட்டு அளிக்கப்பட்டது.
அவரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமச்சந்திரன் கவுரவித்து, நினைவுப்பரிசு மற்றும் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
அவர் கூறுகையில், ''மாணவி ஜெர்ஷிதா போல், மற்ற மாணவ - மாணவியரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்,'' என்றார்.
நிறுவன மேலாண்மை இயக்குனர் ராஜிவ் கிருஷ்ணா கூறுகையில், ''மாணவியின் சாதனை, கல்வி நிறுவனத்தின் பெருமையாக இருப்பதுடன், மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது,'' என்றார்.
இந்நிகழ்வில், பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவ கல்லுாரி முதல்வர், நர்சிங், பிஸியோதெரபி மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் முதல்வர்கள், துணை முதல்வர் பரத், விளையாட்டு இயக்குனர் டாக்டர் தீனன் மற்றும் மாணவியின் பெற்றோர் பங்கேற்றனர்.