/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., தேர்தல் அமைப்பாளராக விஜயலட்சுமி நியமனம்
/
பா.ஜ., தேர்தல் அமைப்பாளராக விஜயலட்சுமி நியமனம்
UPDATED : அக் 24, 2025 02:20 AM
ADDED : அக் 24, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்மல்: தமிழக பா.ஜ., தலைமை, கட்சியை வலுப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் களப்பணி ஆற்றவும், தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும் முக்கியஸ்தர்களை நியமித்து வருகிறது.
அந்த வகையில், பம்மல், அண்ணா சாலையில் செயல்படும் பி.பி.ஜெயின் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயலட்சுமியை, பல்லாவரம் சட்டசபை தொகுதி பா.ஜ., தேர்தல் அமைப்பாளராக, கட்சி தலைமை நியமித்துள்ளது.
விஜயலட்சுமி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., துணை தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

