/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வில்லிவாக்கம் பஸ் நிலையம் ஐ.சி.எப்.,பிற்கு மாற்றம்
/
வில்லிவாக்கம் பஸ் நிலையம் ஐ.சி.எப்.,பிற்கு மாற்றம்
வில்லிவாக்கம் பஸ் நிலையம் ஐ.சி.எப்.,பிற்கு மாற்றம்
வில்லிவாக்கம் பஸ் நிலையம் ஐ.சி.எப்.,பிற்கு மாற்றம்
ADDED : பிப் 11, 2025 01:13 AM

வில்லிவாக்கம்,மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் நடக்க உள்ளன.
அதனால், இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ஏழு வழித்தடங்களில் இயக்கப்படும், 63 மாநகர பேருந்துகள், ஐ.சி.எப்., பேருந்து நிலையத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என, போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி, ஐ.சி.எப்., நிறுத்தத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நேற்று முன்தினம் முதல், பேருந்துகள் நின்று செல்கின்றன.
இதில், தடம் எண்: 20, 27டி, 23வி பேருந்துகள், ஐ.சி.எப்., நிலையத்தில் இருந்து, நியூ ஆவடி சாலை வழியாக, நாதமுனி நிறுத்தத்திற்கு சென்று, வில்லிவாக்கம் நிறுத்தம் வழியாக இயக்கப்படும்.
வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட 'எஸ் 43 - எஸ் 44' மினி பேருந்துகள், பயணியர் வசதிக்காக, வழக்கம்போல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.
தடம் எண்: 22 பேருந்து கொரட்டூர் வரையும், திருவேற்காட்டில் இருந்து இயக்கப்பட்ட தடம் எண்: 63 பேருந்து, ஐ.சி.எப்., வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.