/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியை ஆபாசமாக படம் பிடித்த வில்லிவாக்கம் நீச்சல் பயிற்சியாளர் கைது
/
மாணவியை ஆபாசமாக படம் பிடித்த வில்லிவாக்கம் நீச்சல் பயிற்சியாளர் கைது
மாணவியை ஆபாசமாக படம் பிடித்த வில்லிவாக்கம் நீச்சல் பயிற்சியாளர் கைது
மாணவியை ஆபாசமாக படம் பிடித்த வில்லிவாக்கம் நீச்சல் பயிற்சியாளர் கைது
ADDED : மே 03, 2025 11:51 PM

ராஜமங்கலம், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், சென்னையில் தங்கி மருத்துவம் பயின்று வருகிறார்.
இவர், வில்லிவாக்கத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். இவருக்கு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாலாஜி, 39, என்பவர், நீச்சல் பயிற்சி அளித்து வந்தார்.
இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, பாலாஜி இளம்பெண்ணிடம் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.
இதற்கு இளம்பெண் மறுத்துள்ளார். இதனால் பாலாஜி, கடந்த 24ம் தேதி, நீச்சல் குளத்தில் உள்ள அறையில் இளம்பெண் உடை மாற்றும்போது, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின், அந்த இளம்பெண்ணின் பெயரில், 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதள பக்கத்தில் போலி கணக்கை துவங்கிய பாலாஜி, அதில் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், ராஜமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மின்னணு வடிவில் ஆபாச வீடியோவை வெளியிடுதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், பாலாஜியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.