sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பல்கலை பதிவாளர் நியமனத்தில் விதிமீறல்? விபரத்தை சமர்பிக்க அரசுக்கு ஆணையம் கெடு

/

 பல்கலை பதிவாளர் நியமனத்தில் விதிமீறல்? விபரத்தை சமர்பிக்க அரசுக்கு ஆணையம் கெடு

 பல்கலை பதிவாளர் நியமனத்தில் விதிமீறல்? விபரத்தை சமர்பிக்க அரசுக்கு ஆணையம் கெடு

 பல்கலை பதிவாளர் நியமனத்தில் விதிமீறல்? விபரத்தை சமர்பிக்க அரசுக்கு ஆணையம் கெடு


ADDED : மார் 09, 2026 05:37 AM

Google News

ADDED : மார் 09, 2026 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: பல்கலை மானியக்குழு விதிகளை மீறி, சென்னை பல்கலை பதிவாளர் நியமனம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரித்து, 15 நாட்களுக்குள் உண்மை விபரங்களை சமர்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நுாற்றாண்டு பழமையான சென்னை பல்கலையில், பேராசிரியர்கள் பதவி உயர்வு உட்பட பல்வேறு விஷயங்களில், உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாகவும், தேசிய பட்டியலின ஆணையத்துக்கு புகார்கள் சென்றன.

பேராசிரியர் புகழேந்தி என்பவர், பிப்., 6ல், தேசிய பட்டியலின ஆணையத்திற்கு அனுப்பிய கடிதம்:

சென்னை பல்கலை பதிவாளர் தேர்வுக்கான நேர்காணலில், தகுதியான பட்டியலினத்தவர், பழங்குடியினர் பங்கேற்றனர். ஆனால், நேர்முகத் தேர்வு குழுவில், எஸ்.சி., - எஸ்.டி., பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை.

சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் நியமனத்தில், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, கடந்த மாதம் 9ம் தேதி, பல்கலை வளாகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், தேசிய பட்டியலின ஆணையம், தமிழக உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

சென்னை பல்கலை பதிவாளர் நியமனம் தொடர்பாக, பேராசிரியர் புகழேந்தி தெரிவித்துள்ள புகாரை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, தேசிய பட்டியலின ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும்.

உண்மை விபரங்களை, 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பதில் அளிக்க மறுத்தால், தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகள், ஆணையத்தில் நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us