sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.365 கோடி சுருட்டிய 'சைபர்' திருடர்கள்: சென்னையில் ஓராண்டில் 3,692 பேர் புகார்

/

 ரூ.365 கோடி சுருட்டிய 'சைபர்' திருடர்கள்: சென்னையில் ஓராண்டில் 3,692 பேர் புகார்

 ரூ.365 கோடி சுருட்டிய 'சைபர்' திருடர்கள்: சென்னையில் ஓராண்டில் 3,692 பேர் புகார்

 ரூ.365 கோடி சுருட்டிய 'சைபர்' திருடர்கள்: சென்னையில் ஓராண்டில் 3,692 பேர் புகார்


ADDED : மார் 09, 2026 05:38 AM

Google News

ADDED : மார் 09, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் குற்றங்கள் தொடர்பாக, ஓராண்டில் 3,692 பேர் புகார் அளித்துள்ளனர்' என, துணை கமிஷனர் ஸ்ரீநாதா கூறினார்.

சென்னை மாநகர போலீசார் சார்பில், ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்வது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதில், நடிகர் சந்தானம், கூடுதல் பொறுப்பாக மத்திய குற்றப்பிரிவை கவனித்து வரும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

பேரணிக்கு பின், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள, சைபர் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீநாதா கூறியதாவது:

இணையவழியாக நடத்தப்படும் சைபர் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அக்குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.

ஆனாலும், கடந்த ஓராண்டில் மட்டும், சைபர் குற்றங்கள் தொடர்பாக, சென்னையில் 3,692 பேர் புகார் அளித்துள்ளனர். இவர்கள் சைபர் குற்றவாளிகளிடம், 365 கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

இது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி, 208 வழக்குகள் பதிவு செய்து, 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 38.30 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us