ADDED : செப் 20, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ெசன்னை, அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க., வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்றிரவு நடந்தது.
இதில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி பேசுகையில், தேர்தலில் தி.மு.க.,வை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்,'' என்றார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலர் வெங்கடேசன், ஆர்.கே.நகர் பகுதி செயலர் நித்தியானந்தம், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் நேதாஜி கணேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.