/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேல்ஸ், இ.எம்.இ.ஏ., கல்லுாரி அணிகள் 'மோடி' கோப்பை கால்பந்தில் 'சாம்பியன்'
/
வேல்ஸ், இ.எம்.இ.ஏ., கல்லுாரி அணிகள் 'மோடி' கோப்பை கால்பந்தில் 'சாம்பியன்'
வேல்ஸ், இ.எம்.இ.ஏ., கல்லுாரி அணிகள் 'மோடி' கோப்பை கால்பந்தில் 'சாம்பியன்'
வேல்ஸ், இ.எம்.இ.ஏ., கல்லுாரி அணிகள் 'மோடி' கோப்பை கால்பந்தில் 'சாம்பியன்'
ADDED : ஆக 20, 2025 12:28 AM

சென்னை, கல்லுாரிகளுக்கு இடையிலான 'மோடி' கோப்பைக்கான தென்மாநில கால்பந்து போட்டியில், பெண்களில் வேல்ஸ் இன்ஸ்டிடியூட், ஆண்களில் கேரளாவின் இ.எம்.இ.ஏ., கல்லுாரி அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.
'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, 'மோடி கோப்பை'க்கான தென்மாநில கால்பந்து போட்டியை, செங்கல்பட்டு, எப்.சி., மெட்ராஸ் மைதானத்தில் நடத்தின.
போட்டிகள், கடந்த 16ல் துவங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில், தென்மாநில அளவிலான ஆண்களில், 16 அணிகளும், பெண்களில் எட்டு அணிகளும் பலப் பரீட்சை நடத்துகின்றன.
நேற்று மாலை நடந்த பெண்களுக்கான இறுதிப் போட்டியில், வேல்ஸ் அணி தன் சிறந்த தாக்குதலால், எஸ்.டி.என்.பி. வைஷ்ணவ அணியை திணறடித்தது.
துவக்கம் முதலே கோல்களை மழையென பொழிந்து, 6 - 0 என்ற கணக்கில், எஸ்.டி.என்.பி., அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆண்களில், கேளராவை சேர்ந்த இ.எம்.இ.ஏ., மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணிகள் கடும் போட்டியுடன் மைதானத்தை சூடாக்கின. இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்து, ஆட்ட நேர முடிவில், 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
சுவாரஸ்யமான சூழலில் நடந்த, 'பெனால்டி சூட் அவுட்' போட்டியில், 5 - 4 என்ற கணக்கில், இ.எம்.இ.ஏ., அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.