/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேல்ஸ் கால்பந்து அகாடமி பி.டி.உஷா திறந்து வைத்தார்
/
வேல்ஸ் கால்பந்து அகாடமி பி.டி.உஷா திறந்து வைத்தார்
வேல்ஸ் கால்பந்து அகாடமி பி.டி.உஷா திறந்து வைத்தார்
வேல்ஸ் கால்பந்து அகாடமி பி.டி.உஷா திறந்து வைத்தார்
ADDED : நவ 22, 2025 04:04 AM

சென்னை: சென்னை, தாழம்பூரில் உள்ள வேல்ஸ் கல்வி நிறுவன வளாகத்தில், வேல்ஸ் கால்பந்து அகாடமி மற்றும் நீச்சல் பயிற்சி மையம், 25 கோடி ரூபாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான 'பத்மஸ்ரீ' டாக்டர் பி.டி.உஷா, நேற்று திறந்து வைத்தார். கால்பந்து அகாடமியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொழில்முறை பயிற்சியாளர்கள், வீரர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
வேல்ஸ் கல்வி நிறு வனத்தினர் கூறியதாவது:
கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், வேல்ஸ் பயிற்சி மையத்தில் உள்ள ஒரு மாணவருக்கு 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி, ஸ்பெயினில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தவிர, 200 இளம் மாணவ - மாணவியருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
வேல்ஸ் பல்கலை நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், ஆசிய கபடி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கார்த்திகா மற்றும் அபினேஷ் ஆகியோருக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐசரி கே.கணேஷ் கூறுகையில், ''தமிழக கிராமங்களில் இருந்து, கால்பந்தில் ஆர்வமுள்ள 83 மாணவர்களை தேர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், கல்வி ஆகிய அனைத்தையும் முழுமையாக இலவசமாக வழங்கி வருகிறோம். கால்பந்தில் தமிழகத்திற்கு தனி அடையாளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்,'' என்றார்.

