/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேல்ஸ், எஸ்.ஆர்.எம்., பல்கலை கபடியில் அரையிறுதிக்கு தகுதி
/
வேல்ஸ், எஸ்.ஆர்.எம்., பல்கலை கபடியில் அரையிறுதிக்கு தகுதி
வேல்ஸ், எஸ்.ஆர்.எம்., பல்கலை கபடியில் அரையிறுதிக்கு தகுதி
வேல்ஸ், எஸ்.ஆர்.எம்., பல்கலை கபடியில் அரையிறுதிக்கு தகுதி
ADDED : நவ 04, 2024 04:28 AM

சென்னை:இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், தென்மண்டல பல்கலை இடையிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை மைதானத்தில் நடந்து வருகின்றன.
இதில் தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
'நாக் அவுட்' முறையில் நடந்த இப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., யோகி, பிரிஸ்ட், மங்களூர், மைசூரு, சென்னை, வேல்ஸ், கற்பகம் ஆகிய எட்டு பல்கலை அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
முதலாவது காலிறுதியில் தமிழகத்தின் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 53 - 19 என்ற புள்ளிக்கணக்கில், ஆந்திராவின் யோகி வர்மா பல்கலை அணியை எளிதாக வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
இரண்டாவது காலிறுதியில், தமிழகத்தின் வேல்ஸ் பல்கலை அணி, கோவை கற்பகம் பல்கலை அணியை 38 - 30 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்ற காலிறுதிப் போட்டிகளில் மங்களூர் மற்றும் மைசூரு பல்கலை அணிகள் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.