/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுரையீரல், இதய நலனுக்காக 'ரேலா'வில் வாக்கத்தான் நிகழ்வு
/
நுரையீரல், இதய நலனுக்காக 'ரேலா'வில் வாக்கத்தான் நிகழ்வு
நுரையீரல், இதய நலனுக்காக 'ரேலா'வில் வாக்கத்தான் நிகழ்வு
நுரையீரல், இதய நலனுக்காக 'ரேலா'வில் வாக்கத்தான் நிகழ்வு
ADDED : செப் 28, 2024 12:35 AM
குரோம்பேட்டை, உலக நுரையீரல் தினம், உலக இதய தினம் ஆகியவை, முறையே செப்., 25 மற்றும் 29ம் தேதிகளில் அனுசரிக்கப்படுகிறுது.
இதையொட்டி, நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, வாக்கத்தான் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.
ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி, மருத்துவ இயக்குனர் கவுதமன், தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார், மருத்துவர்கள், மாணவர்கள் உட்பட 500 பேர், 5 கி.மீ., துாரம் சென்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:
இதயம், நுரையீரல் சம்பந்தமான இலவச மருத்துவ முகாம், வரும் 29ல் மருத்துவமனையில் நடக்கிறது.
வேகமான இதயத்துடிப்பு, சுவாசிப்பதில் சிரமம், நெஞ்செரிச்சல், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருப்போர் முகாமில் சிகிச்சை பெறலாம்.
நாட்பட்ட இருமல், சளி அதிகரிப்பு, மூச்சிரைப்பு, ரத்த வாந்தி அல்லது ஒவ்வாமை இருப்போர், நுரையீரல் ஆரோக்கிய முகாமில் பங்கேற்கலாம்.
இ.சி.ஜி., எக்கோ ஸ்க்ரீனிங், எக்ஸ்ரே பரிசோதனை எடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்களுடன் ஆலோசனை செய்யப்படும். முன்பதிவுக்கு 86106 82479 என்ற எண்ணை அழைக்கலாம்.