/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துபாயில் இருந்து சென்னை வந்த தேடப்படும் குற்றவாளி சிக்கினார்
/
துபாயில் இருந்து சென்னை வந்த தேடப்படும் குற்றவாளி சிக்கினார்
துபாயில் இருந்து சென்னை வந்த தேடப்படும் குற்றவாளி சிக்கினார்
துபாயில் இருந்து சென்னை வந்த தேடப்படும் குற்றவாளி சிக்கினார்
ADDED : ஏப் 05, 2025 12:17 AM

சென்னை, தஞ்சாவூர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வாலிபர், ஓராண்டுக்கு பின் துபாயில் இருந்து சென்னை திரும்பியபோது சிக்கினார்.
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, நேற்று காலை 2:30 மணியளவில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் வந்தது. இதில் வந்தவர்களின் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த முகமது அலி உஸ்மான், 26, என்பவரின் ஆவணங்களை பரிசோதித்தபோது, 2024 மார்ச்சில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள், முகமது அலி உஸ்மானை, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். தஞ்சாவூர் போலீசார் வந்து, முகமது அலி உஸ்மானை கைது செய்துள்ளனர்.
ஓராண்டாக வெளிநாட்டில் பதுங்கி இருந்த அவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***