/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வசூல் வேட்டையில் மர்ம கும்பல் பால் முகவர்களுக்கு எச்சரிக்கை
/
வசூல் வேட்டையில் மர்ம கும்பல் பால் முகவர்களுக்கு எச்சரிக்கை
வசூல் வேட்டையில் மர்ம கும்பல் பால் முகவர்களுக்கு எச்சரிக்கை
வசூல் வேட்டையில் மர்ம கும்பல் பால் முகவர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜன 23, 2025 12:13 AM
சென்னை, 'பால் முகவர்களை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்யும் மர்ம நபர்களிடம் விழிப்போடு இருக்க வேண்டும்' என, பால் முகவர்களுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி அறிவுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள, பால் முகவர்களின் கடைகளுக்கு, அதிகாலை நேரத்தில் வரும் மர்ம நபர்கள், மாநகராட்சி பணியாளர் என கூறிக் கொண்டு, அப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடப்பதாகவும், பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரம் 'பெல்ட்' அறுந்து விட்டதாகவும், உதவிப் பொறியாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறி, 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கேட்டு வாங்கிச் செல்வது போன்ற, பல மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.
சென்னை, ஜாபர்கான்பேட்டையில் உள்ள, பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில துணைத் தலைவர் பால்துரை, கடந்த 19ம் தேதி, பால் விநியோகத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அவரது பால் கடைக்கு வந்த மர்ம நபர்கள், அவரது மகனிடம், தங்கள் இல்ல விசேஷத்திற்கு பால், தயிர் வேண்டும் எனக் கூறி, 50,000 ரூபாய் மோசடி செய்ய முயற்சித்துள்ளனர்.
எனவே, காலை, மாலை, ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளபோது, அடையாளம் தெரியாத, முன்பின் பழக்கம் இல்லாத நபர்கள் வந்தால், அவர்கள் கூறுவதில் சந்தேகம் இருந்தால், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

