/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' வாஸ்போ ' செஸ் வேலம்மாள் பள்ளி முதலிடம்
/
' வாஸ்போ ' செஸ் வேலம்மாள் பள்ளி முதலிடம்
ADDED : பிப் 21, 2025 12:24 AM

சென்னை, 'வாஸ்போ' என்ற தலைப்பிலான மாநில செஸ் போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தது.
இதில், பள்ளி அளவில், 15, 18 வயது பிரிவுகளும், கல்லுாரி பிரிவினருக்கு தனியாகவும் நடத்தப்பட்டன. போட்டியில், மாநிலம் முழுதும் 50 கல்லுாரிகளில் இருந்து, 145 மாணவியர் பங்கேற்றனர்.
அனைத்து சுற்றுகள் முடிவில், 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில், முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி கீர்த்திஸ்ரீ முதலிடம் பிடித்தார்.
அதேபோல், 15 வயது பிரிவில், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் மாணவியரான தீபிகா, ஷர்வானிகா மற்றும் ஷண்மதி ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை வென்று அசத்தினர். இரு பிரிவிலும், முதல் பத்து இடங்களை பிடித்தோருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

