/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரதான சாலையில் வீணாகும் குடிநீர்
/
பிரதான சாலையில் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 19, 2025 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பெரியமேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதைக்கப்பட்ட குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், நான்கு நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இவற்றை சீரமைக்க, குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தண்ணீர் தொடர்ந்து வெளியேறி சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, போலீசார் இரும்பு தடுப்பு வைத்துள்ளனர். ஆனால், அந்த இடத்தில் வாகனங்கள் மெதுவாக செல்வதால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
குழாயில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க, குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.