/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனி நபர்களிடம் ஏமாறாதீர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை
/
தனி நபர்களிடம் ஏமாறாதீர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை
தனி நபர்களிடம் ஏமாறாதீர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை
தனி நபர்களிடம் ஏமாறாதீர் குடிநீர் வாரியம் எச்சரிக்கை
ADDED : அக் 19, 2024 12:15 AM
சென்னை, குடிநீர் வாரியத்தால், அங்கீகரிக்கப்படாத சில நபர்கள், தொலைபேசி வாயிலாக நுகர்வோரை அணுகுவதாக புகார்கள் வருகின்றன.
குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணத்தை தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு, 'கூகுள் பே, பேடிஎம்' போன்ற, யு.பி.ஐ., செயலிகள் வாயிலாக செலுத்த வற்புறுத்துவதாகவும், தவறினால் குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனக்கூறியும் பணம் பறிக்கின்றனர். இந்த மோசடியை நுகர்வோர் நம்ப வேண்டாம்.
வரி, கட்டணம் செலுத்தும்போது, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குடிநீர் வாரிய இணையதளமான, www.cmwssb.tn.gov.in அல்லது https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற இணைப்பு வாயிலாக செலுத்தலாம்.
'கூகுள்பே, போன்பே, பேடிஎம்' போன்ற செயலியில், CMWSSBஐ தேர்ந்தெடுத்து, பில் எண், மொபைல் எண்ணை உள்ளீடு செய்து செலுத்த வேண்டும்.
வரி வசூல் மையங்களில், காசோலை, வரைவோலை, டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாக செலுத்தலாம். பணிமனை மேலாளர்கள் வைத்துள்ள, ஐ.பி.ஓ.எஸ்., இயந்திரம் வாயிலாகவும் செலுத்தலாம்.
பொதுமக்களுக்கு, நிலுவை தொகை செலுத்துவதில் சந்தேகம் ஏற்பட்டால், 044 - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

